50 பெண்களை ஏமாற்றிய சாமியார்.. திடுக்கிடும் தகவல்

56பார்த்தது
50 பெண்களை ஏமாற்றிய சாமியார்.. திடுக்கிடும் தகவல்
சிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர், அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டுள்ளார். இந்நிலையில், யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மாந்திரீகர் அர்ஜூன் கிருஷ்ணாவை சென்று பார்த்துள்ளார். அவர், அந்த பெண்ணை குடும்பத்துடன் சேர்த்து வைப்பதாக கூறி ரூ.1 லட்சத்தி 50 ஆயிரம் பெற்றுள்ளார். மேலும் அந்த பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் வண்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் இதே போல் 50 பெண்களை அவர் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி