ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஓமன் தலைநகர் மஸ்கட் நோக்கி 148 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.