திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க, மலேசியாவைச் சேர்ந்த சுலைமான் என்ற நபர் சுமார் ரூ.3,000 வசூலிக்கிறார். தனது காதலி அல்லது மனைவி முன் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், ஒரு நாடகம் போட்டு தான் அதில் அடிவாங்குபவர் போல் நடிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.