திமுக அரசையும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசையும் அதிமுக பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் என்பது போல, டெல்லியைக் கைகாட்டி நிதி அமைச்சர் தப்பிக்கப் பார்க்கிறார். நாணய வெளியீட்டிற்கு மத்திய அமைச்சரை அழைத்த உங்களால் நிதியைப் பெற முடியவில்லை என்றால், நிர்வாகத்திறன் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களில் தொய்வு இல்லாமல் நிதியை முறையாகப் பெற்று நிறைவாக ஆட்சி செய்தோம்” என்றார்.