1,400 ஆண்டுகள் பழமையான ஹோட்டல் ஜப்பான் நாட்டில் செயல்பட்டு வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? புஜிவாரா மொய்டோ என்பவரால் கட்டப்பட்ட ஹோட்டல், 52வது மெய்டோ குடும்பத்தினரால் இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் இறுதியாக 1997ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இயற்கை காட்சி, குளியல் தொட்டி, சூடான நீரூற்றுக்கு பிரபலமான ஹோட்டலில் ஒருநாள் தங்க ரூ.35,000 இந்திய மதிப்பில் செலுத்த வேண்டும்.