சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் தற்கொலை

57904பார்த்தது
சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூரில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டார். சாக்லேட் ஆசைகாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை ஷேக் முகமது (வயது 60) என்ற முதியவர் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டார். குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். ஷேக் முகமது கடந்த வெள்ளிக்கிழமை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி