பழைய 100 ரூபாய் இனி செல்லாதா! உண்மை என்ன?

68149பார்த்தது
பழைய 100 ரூபாய் இனி செல்லாதா! உண்மை என்ன?
பழைய 100 ரூபாய் நோட்டுகள் மார்ச் 31, 2024க்கு பிறகு செல்லாது என்றும், அதற்குள் அந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளது. இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான செய்தி என்றும், பழைய 100 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது குறித்து, அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. எனவே பழைய 100 ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.