மோடி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டது

21249பார்த்தது
மோடி தலைமையில் நடந்த NDA ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது. மோடி தலைமையில் ஆட்சி அமைக்க கூட்டணிக் கட்சிகள் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதங்களுடன் குடியரசுத் தலைவரை சந்தித்து, மோடி ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனிடையே, அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை மோடி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் அளித்த நிலையில், 17வது மக்களைவையை கலைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி