இந்தியாவில் பல கோயில்கள் மலை மீது அமைந்துள்ளன. மலைகள் சுத்தமாகவும், அமைதியாகவும் இருப்பதால் அங்குள்ள கோயில்களில் அமர்ந்தால் மன அமைதி தானாக தேடி வரும். பஞ்சபூதங்கள் அனைத்திலும் இறைவன் நீக்கமற நிறைந்து வீற்றிருக்கிறான். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை இறைவனுக்கு கம்பீரமாகவும், கருணையுடனும் சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன.