ஜனவரி 22 முதல் 25-ம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. கோள்கள் வானில் ஒரே வரிசையில் தோன்றுவது சிறப்பு இல்லை என்றாலும், அவற்றில் பலவற்றை ஒரே நேரத்தில் பார்ப்பது அரிது. அத்தகைய அரிய நிகழ்வு நடக்க உள்ளது. வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள் வானில் தெரிய உள்ளது. இதில் நெப்டியூன், யுரேனஸை சக்தி வாய்ந்த தொலைநோக்கியால் பார்க்க முடியும். ஆனால் மற்ற கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.