நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை சீக்கிரமாக 4,000 தொடலாம் என கூறப்படுகிறது. புதுச்சேரி, ஹரியானா போன்ற சிறிய யூனியன் பிரதேசங்களில் கூட கொரோனா மெல்ல பரவி வருகிறது. ஆனால், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று வரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அந்த அளவுக்கு அம்மாநிலத்தில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.