விழுப்புரம் மாவட்டத்தில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு சுமார் 5 கி.மீ நடந்து செல்ல வேண்டியுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அரசு பள்ளி மாணவி தர்ஷினியின் கோரிக்கையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உடனடியாக நிறைவேற்றியுள்ளார். மாணவியின் ஊரான அம்மணம்பாக்கம் முதல் அனந்தமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள பேருந்தினை தர்ஷினியே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.