குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பருப்புக்கீரை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும். பருப்புக்கீரையை நன்கு அரைத்து அக்கிவந்த இடங்களில் தடவி வந்தால், கொப்புளங்கள் மறையும். இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை. பருப்புக்கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டல் தலைவலி குணமாகும்.