கிழக்கு டெல்லியில் உள்ள ஷாஹ்தாராவில் 20 வயது இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இரவு நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலனே சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. சாய்ரா என்ற பெண்ணை அவரது காதலன் ரிஸ்வான் என்பவர்
ஒரு முறை தலையிலும் ஒரு முறை முதுகிலும் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சம்பவத்திற்கு சற்று முன்பு ஜோடி ஒன்றாக நடந்து செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.