அசாம்: கவுகாத்தி நகரின் லேட் கேட் பகுதியில் காதலியை, காதலன் குத்திக் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மவுசுமி கோகாய் என்ற இளம்பெண் ஆன்லைனில் புக் செய்த பைக்குக்காக தனது வீட்டின் வெளியே நின்றிருந்தார். அப்போது, காரில் வந்த அவரது காதலன் பூபென் தாஸ் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, கோகாயை குத்தி கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார். இதையடுத்து, போலீஸ் அவரை பிடிக்க முற்பட்ட போது, தற்கொலைக்கு முயன்றுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.