தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் வட பள்ளியில் அமைந்துள்ளது நரசிம்மர் சுவாமி திருக்கோயில். இங்குள்ள மூலவர் மூச்சு விடுவதை உணர முடியும் என சிலிர்க்கின்றனர் பக்தர்கள். அதன்படி, கருவறையில் நரசிம்மர் சுவாமி விடும் மூச்சுக்காற்றால் தீபச்சுடர் அசைந்தாடுகிறது என கூறப்படுகிறது. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தாக உள்ளன. மகாலட்சுமி தாயார் தனி சன்னதியில் இருக்கிறார்.