சர்வதேச அளவில் மிக நீளமான ரயில், ஆஸ்திரேலியாவில் இயக்கப்படும் இரும்புத்தாது சுமந்து செல்லும் ரயில் ஆகும். இது சுமார் 7.3 கிமீ நீளம் கொண்டது. இந்த ரயிலில் 682 பெட்டிகள், 8 எஞ்சின்கள் இருக்கும். இந்த சரக்கு ரயிலின் எடை 99,734 டன்கள் ஆகும். அதிக சக்தி கொண்ட எஞ்சின்கள் ஒவ்வொரு 100 பெட்டிகளுக்கு இடையே நிறுத்தப்படும். இதனால் ரயில் தொடர்ந்து சீரான வேகத்தில் இழுத்து செல்லப்படும். முதல் செல்லும் இரயிலில் கிடைக்கும் சமிக்கையைப் பொறுத்து பிற எஞ்சின்களின் வேகம் நிர்வகிக்கப்படும்.