2024-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகளின் தரவரிசை பட்டியலை கரப்ஷன் பெர்சப்ஷன் இன்டெக்ஸ் (CPI) என்கிற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகில் ஊழல் மிகவும் குறைவாக நடக்கும் நாடாக டென்மார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் பின்லாந்தும், மூன்றாவது இடத்தில் சிங்கப்பூரும், நான்காவது இடத்தில் நியூசிலாந்தும் உள்ளன. 2023-ம் ஆண்டு 93-வது இடத்தில் இருந்த இந்தியா 2024-ல் மூன்று இடங்கள் பின்னோக்கிச் சென்று 96-வது இடத்தில் உள்ளது.