திமுக கொண்டு வந்த சட்டங்கள் வலிமையானவை என்று அக்கட்சியின் சட்டத்துறை மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி பேசினார். "உள் ஒதுக்கீடு, அனைத்து சாதியினர் அர்ச்சகர், பெண்களுக்கு சொத்துரிமை போன்றவை முன்மாதிரி. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசால் அரசியல் சட்டத்துக்கு ஆபத்து வந்துள்ளது. பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்து போராடி வருகிறோம்" என்றார்.