நமது உடலில் மிகமுக்கிய அங்கமான தோல், ஒட்டுமொத்த உடல் எடையில் 15% பங்கு கொண்டது ஆகும். ஒவ்வொரு மனிதரும் சுமார் 10 கிலோமீட்டர் தூர அளவிலான தோலை சுமந்தபடி வாழ்ந்து வருகிறோம். நமது தோல் மேல் தோல், கீழ் தோல் என இரண்டு அடுக்குகள் கொண்டது. மேல் தோல் மெலிதாகவும், கீழ் தோல் சற்று தடிமனாகவும் இருக்கும். ரத்த நாளங்கள், வியர்வை சுரப்பிக் கொண்டு உடல் வெப்பத்தை தக்கவைக்கவும், பராமரிக்கவும் தோல் உதவுகிறது. உடலில் பிற நோய்க்கிருமிகள் தாக்காமல் இருக்க பிரத்தியேக பணிகளை தோல் செய்கிறது.