நாதக சீமான் அறிக்கையில், "நாமக்கல் சித்தம்பூண்டி மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை; கொடூர திமுக ஆட்சிக்கு, கொலைக்களத் தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி. மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. திமுக ஆட்சியில் கொங்கு மாவட்டங்களில் தோட்டத்து வீடுகளில் முதியவர்களை குறிவைத்து அடுத்தடுத்து நடைபெறும் தொடர்படுகொலைகள் அதிர்ச்சி என்பதை தாண்டி அன்றாட நிகழ்வாகிவிட்டதுதான் கொடுந்துயரத்தின் உச்சம்” என்றார்.