மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இந்த திரைப்படத்தை பலத்த பாதுகாப்புடன் திரையிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இத்திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்ட நாளில் இருந்தே பல சர்ச்சைகளும் போராட்டங்களும் எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றம் இத்திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.