இயக்குனர் சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான "இந்தியன்" படம் வெளியாகி இன்றோடு 28 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக, தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் "இந்தியன் 2" கமலோடு முதல் பாகத்தின் கமல் இருப்பது போன்ற போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்தியன்" படம் அன்றைய காலகட்டத்தில் பல மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, "இந்தியன் 2" படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.