“சாதிவாரி கணக்கெடுப்பை உறுதி செய்வதே உடனடி பணி”

68பார்த்தது
“சாதிவாரி கணக்கெடுப்பை உறுதி செய்வதே உடனடி பணி”
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்வதே நமது உடனடி பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஓபிசி சமூகங்களின் விகிதாச்சாரத்தை அடையாளம் காண, சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. திமுகவின் சட்டப் போராட்டத்தால் 3 ஆண்டுகளில் மருத்துவத்தில் 15,066 ஒபிசி இடங்கள் கிடைத்தன. நமக்கான பங்கினை பெற மத்திய அரசால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி