காவல் துறையின் ஈரல் மட்டுமல்ல. இதயமும் கெட்டுவிட்டது என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "உத்தரவுகளை முறையாக காவல் துறை பின்பற்றுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும். என்ன தவறு செய்தாலும் தண்டிக்கப்படமாட்டோம் என்ற நம்பிக்கையில் காவல் துறை செயல்படுகிறது. காவல் துறை சித்திரவதைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.