உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் எச்சில் துப்பி ரொட்டி சுட்ட ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஜியாபாத், லோதி சௌக் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே உள்ள உணவகத்தில் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பணியாற்றி வருகிறார். இவர் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் தந்தூரி ரொட்டிகளில் எச்சில் துப்பி தயாரித்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.