மும்பையில் ரூ.90 லட்சம் கொடுத்தால், நீட் தேர்வு மதிப்பெண்கள் மாற்றி அமைக்கப்படும் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் உட்பட 2 பேரை CBI இன்று (ஜூன் 23) கைது செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மோசடி செய்த அவர்களை, பெற்றோர்கள் போல் நடித்து பேரம் பேசி சிபிஐ அதிகாரிகளே வலைவிரித்துப் பிடித்துள்ளளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.