கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன்னை நீக்கினால் மட்டுமே அது செல்லுபடியாகும். நான் தற்போதும் மாவட்ட செயலாளர் தான் என கரூர் பாமக மாவட்ட செயலாளர் பாஸ்கர் கூறினார். பாமகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை காரணமாக தந்தை-மகனால் (ராமதாஸ் Vs அன்புமணி) நிர்வாகிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஜூன் 10) கரூர் மாவட்ட செயலாளரை கட்சியின் தலைவர் அன்புமணி நீக்கி உத்தரவிட்டார். இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஸ்கர், "ராமதாஸ் மட்டுமே தன்னை நீக்கும் அதிகாரம் கொண்டவர்" என தெரிவித்தார்.