மார்ச் 15, 1962 அன்று, ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி அமெரிக்க காங்கிரசில் உரையாற்றி நுகர்வோர் உரிமைகள் குறித்து பேசினார். அவரது உரையில் "நுகர்வோர் என்பதற்கான வரையறைக்குள் நாம் அனைவரும் அடங்குவோம். நுகர்வோரின் கருத்துகள் பெரும்பாலும் அரசு, தனியார் அமைப்புகள் காதில் வாங்கிக் கொள்வதில்லை" என்றார். நுகர்வோர் உரிமைகள் குறித்துச் சர்வதேச அளவில் ஒரு தலைவர் பேசியது அதுவே முதல் முறை என கருதப்படுகிறது.