கொலம்பியா நாட்டின் நாடாளுமன்றக் கூட்டத்தில் சுகாதார சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பெண் எம்.பி கேத்தி ஜூவினாவ், இ-சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இவர், கிரீன் அலையன்ஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். நாட்டின் பிரதிநிதிகள் சபையின் கூட்டத்தில் இவர், வேப்பர் பயன்படுத்தியது கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.