நாம் பதட்டமாக இருக்கும்போது நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? ஆம், பதற்றம் நமது உடலில் முதலில் வியர்வையை ஏற்படுத்தும். இது பிறரை எச்சரிக்கும் ஒரு வழி ஆகும். பதற்றத்துடன் நாம் இருந்தால் நரம்பு மண்டலம் செயல்பட்டு அட்ரினலின், கார்டிசோல் மனஅழுத்த ஹார்மோனை வெளியிடும். இதனால் உடலில் வியர்வை வெளியேற தொடங்கும். பதற்றத்தில் அதிக வியர்வை சுரப்பது ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என அழைக்கப்படுகிறது.