பாம்பை அடக்கம் செய்த விவசாயி

2256பார்த்தது
பாம்பை அடக்கம் செய்த விவசாயி
இவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவரது விலை நிலத்தில் எலித்தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒரு நாள் இவரது வயல்வெளியில் சாரைப்பாம்பு இருந்ததை கண்டுள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் இருந்த எலிகளின் தொல்லை குறைந்ததை கண்டா அவர் இதற்கு அந்த பாம்புதான் காரணம் என அவர் நினைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த பாம்பு வயல் அருகே இறந்து கிடந்துள்ளது. தனக்கு உதவி செய்த பாம்பை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என நினைத்து பாடை கட்டி தாரைதப்பட்டையுடன் இடுகாட்டில் அடக்கம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி