சினிமா நட்சத்திரங்களை எங்கு பார்த்தாலும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கவும், கைகுலுக்கவும் ரசிகர்கள் சூழ்ந்து விடுவார்கள். இதுபோன்ற நேரங்களில் நடிகர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த வகையில் ஹாலிவுட் ஹீரோ அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கருக்கு சமீபத்தில் ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவரை ரசிகர் ஒருவர் எட்டி உதைத்தார். இதனை அடுத்து அவரை என்றென்றும் நினைவுகூர அந்த ரசிகர் அதை செய்தார் என்றும் கூறினார். 2019 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.