சென்னையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அமித்ஷா வருகை திமுகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக பாஜகவினர் கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பதற்றமோ, பயமோ திமுக ஆட்சிக்கு இல்லை. திமுக கூட்டணி வலுவாக தெளிவாக உள்ளதாகவும் பதற்றம் பாஜகவிடம் இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து தான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது. இதற்கு அமித் ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு” என கூறினார்.