'இரட்டை இலையை இபிஎஸ் கபளீகரம் செய்துவிட்டார்'

51பார்த்தது
'இரட்டை இலையை இபிஎஸ் கபளீகரம் செய்துவிட்டார்'
இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துள்ளார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இரட்டை இலை போலிகளின் சின்னம், புரட்சித்தலைவர் கண்ட இரட்டை இலை சின்னம் இப்போது கயவர்கள் கையில் உள்ளது. எம்ஜிஆரிடம் இருந்த இரட்டை இலை சின்னம் நம்பியாரிடம் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் கபளீகரம் செய்துள்ளார். எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி வெற்றிக்கொடி ஏற்றிட சபதமேற்போம். வரும் 24ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டம் பங்களாமேட்டில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி