கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற உணவு வழங்கும் நிகழ்வின் போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 35 குழந்தைகள் உள்பட 67-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிரிசியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வரும் நிலையில், ஓயா மாநிலம், தென்கிழக்கு அனம்ப்ரா, தலைநகர் அபுஜா ஆகிய 3 வெவ்வேறு பகுதிகளில் இக்கோர நிகழ்வு நடந்தேறியுள்ளது.