தென்அமெரிக்காவின் பொலிவியாவில் சுமார் 67 கிமீ நீளம் கொண்ட வடக்கு யுங்காஸ் சாலை 'மரண சாலை' என அழைக்கப்படுகிறது. குறுகிய மலை வழிச்சாலை, செங்குத்தான பாறை, நிலச்சரிவு, திடீர் மூடுபனி போன்றவற்றுக்கு இது பிரபலமானதாகும். பாதுகாப்பு தடுப்புகள் இல்லாத காரணத்தால் எண்ணற்ற விபத்துகள் இங்கு நடக்கும். ஒரு இன்ச் தவறினால் மரணம் மட்டுமே பரிசு என்ற வகையில் பொலிவியாவை அமேசான் மழைக்காட்டுடன் இணைக்கும் சாலை இதுவே ஆகும். 1930ல் முதலில் கட்டப்பட்டு பின் 2007ல் இந்த சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது.