உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்ஷெஹர் மாவட்ட போலீசார், 'ருப்கிஷோர் மீனா' எனப்படும் கந்திவேஷ் பாபாவை பாலியல் தொல்லை அளித்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். புற்றுநோய்க்கு பாரம்பரிய முறையில் வைத்தியம் பெற வந்த பெண்ணை அவர் தனி அறையில் பூட்டி வைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்பெண் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.