எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கையில், "தற்போது பொதுத்தேர்தல் நெருங்கி வருவதை மனதில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மனுக்களை பெறும் நாடகத்தை அரங்கேற்ற உள்ளதாக தெரிகிறது. அப்பாவி மக்களின் காதுகளில் காகித பூ சுற்றி வேடிக்கை காட்டுகிறார் முதல்வர். எந்தவித கொள்கையும் இல்லாமல் கொள்ளையடிப்பதை கலையாகக் கொண்டு செயல்படுகிறது அரசு" என குறிப்பிட்டுள்ளார்.