விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில், சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், தணிக்கை குழு இப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகத்திற்கும் 'ஏ' சான்றிதழ் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாக உள்ளது.