திடீரென பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய ஓட்டுநர்

66பார்த்தது
திடீரென பற்றி எரிந்த கார்.. உயிர் தப்பிய ஓட்டுநர்
சென்னை அண்ணா சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டூர்புரத்திலிருந்து எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது காரின் முன் பக்கத்தில் புகை வந்துள்ளது. இதனைப் பார்த்த பைக் ஓட்டுநர், கார் ஓட்டுநரிடம் கூறி எச்சரித்துள்ளார். உடனே அவர் காரை ஓரமாக நிறுத்தி இறங்கினார். அதற்குள் கார் முழுவதுமாக தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.