திருச்சியின் அடையாளங்களில் ஒன்றாக வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளது. காரணம் இது ஆசிய அளவில் மிகப்பெரிய அளவிலான பூங்கா. இங்கு தற்போது 129 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன. இங்கு இருசக்கர வாகனங்கள், கார், வேன் போன்ற வாகனங்களில் மட்டுமே செல்ல முடியும். ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்தும் வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்லலாம். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் இங்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.