மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து தீக்கிரையானது!

760பார்த்தது
மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து தீக்கிரையானது!
கல்லூரி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்த பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வந்து திரும்பிய பேருந்து நேற்று நள்ளிரவில் மேட்டுப்பாளையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் கீழே இறங்கியதால் ராசிபுரம் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 57 பேர் உயிர் தப்பினர். பின்பக்கம் தீப்பற்றியதை கவனிக்காமல் ஓட்டுநர் தொடர்ந்து பேருந்தை | இயக்க, பின்னால் வந்த வாகனத்தின் ஓட்டுநர் தீ குறித்து தெரிவிக்க உடனே பேருந்தை நிறுத்தி மாணவர்கள் இறக்கி விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி