பிகார்: சீதாமரி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 7), மிட்டாய் திருடியதாகக் கூறி 5 சிறுவர்களை கடைக்காரர் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். மேலும், அந்த சிறுவர்களை நிர்வாணமாக்கி, செருப்பு மாலை அணிவித்து, கிராமத்தை சுற்றவைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடைக்காரர் உட்பட 3 பேரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.