ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் திடீரென மணமகன் மாயமானதால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். பாண்டி என்ற இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் நடத்தை சரியில்லை என கூறி பாண்டி ஓடிவிட்டதாக அவர் தந்தை தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.