கோவை தொண்டாமுத்தூர் அருகே 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே நாகராஜபுரம் நடுநிலை பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தண்ணீர் தொட்டியில் கிடந்த சிறுவன் குகன்ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தையின் பெற்றோருக்கு ரூ.50,000 நிதி உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கியுள்ளனர்.