நீலகிரி: உதகை அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த அஞ்சலை என்ற பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேயிலை தோட்டத்தில் பெண்ணின் உடல் உறுப்புகள் சிதறிக் கிடப்பதை பார்த்து அதிர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அஞ்சலையை தாக்கி இழுத்து சென்றது சிறுத்தையா? புலியா? என்பதை கண்டறியும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.