தெலங்கானா மாநிலம் விகாராபாத் - தரூர் மண்டலம் கும்மரப்பள்ளி கிராமம் அருகே பாண்டுநாயக் என்பவர் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக கிடைந்துள்ளார். இதனை, அவ்வழியாக வாக்கிங் சென்ற இளைஞர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.