அகமதாபாத்தில் நேற்று (ஜூன் 12) நடந்த விமான விபத்தில் 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். பயணிகளின் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி காண்போரின் கண்களை கலங்க செய்து வருகிறது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து ஜோதிடர் ஷர்மிஸ்தா கடந்த வாரமே தனது எக்ஸ் தளத்தில், '2025-ம் ஆண்டில் இந்திய விமான போக்குவரத்து துறை சிறப்பாக செயல்படும். மேலும், விமான விபத்து தொடர்பான தலைப்பு செய்திகள் நமக்கு அதிர்ச்சியை தரக்கூடும் என பதிவிட்டுள்ளார். அவருடைய அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.