"திமுக அரசு தற்போது வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகையை திமுக தானாக தரவில்லை, நாங்கள் வாதாடி, போராடி பெற்றுத் தந்தோம். ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை தரப்பட்டது" என சென்னையில் நடைபெறும் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108ஆவது பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.